

திராவிட மொழிகளுள் ஒன்று தமிழ். தமிழகம், புதுச்சேரி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற நாடுகளில் பேசப்பெற்றுவரும் உயர்ந்த மொழி தமிழ். இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளில் அலுவல் மொழியாகத் தமிழ் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகவும் தமிழ்மொழி விளங்குகிறது. சிங்கப்பூரின் சீர்மிகு ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் தமிழ் கோலோச்சுகிறது. இந்திய அரசால், ‘செம்மொழி’ என்னும் தகுதியைப் பெற்ற பழமையான ஒப்பற்ற தனிச்சிறப்பு வாய்ந்த மொழியாகவும் தமிழ் உள்ளது.
2019 இல் நூற்றாண்டு விழாக் கொண்டாடிய (1919 – 2019) தேசியக்கல்லூரியில் (தன்னாட்சி) தமிழ்த்துறையானது, மொழிப்பாடம், இளங்கலை, இளநிலை (பி. லிட்.), முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைத் தன்னகத்தே கொண்டு பயிற்றுவித்து வருகிறது. அரசு உதவிபெறும் பிரிவினுள் 13 பேராசிரியர்களும், சுயநிதிப் பிரிவில் 15 பேராசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுள் 25 பேராசிரியர்கள் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இதுகாறும் 190 முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கிப் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுள் இத்தமிழ்த்துறை முதன்மை இடத்தில் விளங்கி வருகிறது.
இளங்கலை வகுப்பில் 75 மாணவ – மாணவியர்கள், முதுகலையில் 10 பேர், ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 24 பேர், முனைவர் பட்ட ஆய்வில் 37 பேர் பயின்று வருகின்றனர். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள மாணவ மாணவியர் இத்துறையில் ஆர்வமுடன் சேர்ந்து பயின்று வருகின்றனர். மாணவ மாணவியர் பேச்சாளர்களாக, கவிஞர்களாக ஒளிர்ந்து சிறப்புற இத்துறை வழிகாட்டி வருகிறது.
இத்துறையில் பணிபுரியும் பேராசிரியர்கள் பல்வேறு பல்கலைக்கழக, தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடத்திட்ட வல்லுநர்களாகச் செயலாற்றி வருகின்றனர். இங்குப் பயின்றோர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி, பலகலைக்கழகப் பேராசிரியர்களாகவும் நன்முறையில் பணியாற்றி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்துறை உருவாக்கியுள்ளது.
இளங்கலை, முதுகலையில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறச் செய்து மேற்படிப்பு மற்றும் பணிவாய்ப்பிற்கு மாணவர்களை இத்துறை ஆற்றுப்படுத்தி வருகின்றது.
The Department of Tamil was started in the year 1957. The Department conducts B.A, M.A, M.Phil and Ph.D programmes. There are 24 staff members in the department. 8 Staff members are recognized by Bharathidasan University for Ph.D guidance. There are over 40 scholars doing research leading to Ph.D degree.
There are 97 students in B.A. Programme, 37 in M.A., 20 in M.Phil and 11 in Ph.D. Programme. Most of the students come from neighbouring villages around Tiruchirapalli from downtrodden agricultural families.
Apart from academic programmes the department trains the students on oratory and writing. Students who fail in University examinations are given remedial coaching. Many alumni of the department serve as teachers in schools, Colleges and in Universities.
The Department offers both UG & PG Programme under Choice Based Credit System. Many staff members are involved in the curriculum development of Bharathidasan University and other Autonomous Colleges in the last five years. Many staff members serve as Members of Board of studies in Bharathidasan University and Autonomous Colleges. More than a 100 M.Phil have been produced in the last five years.
The Department acts as Regional Field Unit (RFU) for National Testing Service (NTS), a body of Government of India having its Head Quarters at Central Institute of Indian Language, Mysore.
Apart from the large number of valuable collection of books in the Library, the department keeps 500 books under book bank scheme.
The following journals are subscribed
The pass percentage is 60 -70% in UG and 90-95% in PG Programmes. The dropout rate ranges from 1-3%.
மையத் தமிழகமாம் திருச்சிராப்பள்ளியின் மணிமகுடமாகத் திகழ்ந்துவரும் உயர்கல்வி நிறுவனம் தேசியக்கல்லூரி. 1919 ஆம் ஆண்டு சுதேச உணர்வின் சுடர்விளக்காக ஏற்படுத்தப்பட்ட இக்கல்லூரி, நூறாண்டுகளாகத் தொடர்ந்து அகிலத்திற்கெல்லாம் ஞானஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. பார்போற்றும் இக்கல்லூரியின் சீர்மிகு துறைகளுள் தமிழாய்வுத்துறையும் ஒன்று. 1919 இல் மொழிப்பாடம் மட்டும் கற்பிக்கும் துறையாக இருந்தது. 1968 இல் முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டமேற்படிப்புத் தொடங்கப்பெற்றது. 1979 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பெற்றது. பின்னர் 1981 இல் இது ஆய்வுத்துறையாக வளர்ச்சி பெற்றது. 2017 இல் சுயநிதிப் பிரிவில் பி.லிட். தமிழ்ப் பட்டப்படிப்பு உருவாக்கப்பெற்றது.
உயர்கல்வித்துறையில் முதுகலைத்தமிழ்ப் பட்டமேற்படிப்பைத் தொடங்கி அரை நூற்றாண்டை (1968 - 2018) வெற்றிகரமாக இத்துறை நிறைவுசெய்துள்ளது. திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுள் தமிழ்ப்பிரிவில் 182 முனைவர் பட்ட ஆய்வுகளை உருவாக்கிய பெருமை தேசியக்கல்லூரித் தமிழாய்வுத்துறைக்கே உரியது. இத்துறையின் முதல் துறைத்தலைவரான பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர், மகாகவி பாரதியாரை, வி.சுப்பிரமணிய ஐயரிடத்தில் அறிமுகப்படுத்தி, சுதேசமித்திரன் இதழில் பணியமர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர், இந்திராபார்த்தசாரதி போன்றோர் பணியாற்றிய, கு.ப. ராஜகோபாலன் (கு.ப.ரா) போன்றோர் பயின்ற சிறப்புகள் இத்துறைக்கு உண்டு. இங்கு, தமிழ்கற்ற பலர், நாடுபோற்றும் நல்லாசிரியர்களாகவும் நாவலர்களாகவும் பாவலர்களாகவும் சிறந்து விளங்குகின்றனர்.
தமிழ்த்துறையில் பணிபுரிந்தோர் | ||
---|---|---|
1 | திருமிகு ம. கோபாலகிருஷ்ணய்யர் | 1919 - 1927 (முதல் துறைத்தலைவர்) |
2 | திருமிகு எஸ். சீதாராமய்யர் | 1926 - 1956 |
3 | திருமிகு ஆர். வாசுதேவ சர்மா | 1926 -1937 |
4 | திருமிகு தி.சே. பாலசுப்பிரமணியம் | 1935 - 1974 |
5 | திருமிகு சிவகுருநாதப்பிள்ளை | 1937 - 1939 |
6 | திருமிகு இரா. இராதாகிருஷ்ணன் | 1951 – 1984 |
7 | திருமிகு ஆர். பார்த்தசாரதி | 1952 – 1954 (இந்திராபார்த்தசாரதி) |
8 | திருமிகு குமாரசுவாமிராஜா | 1954 – 1955 |
9 | திருமிகு எஸ். முருகேசன் | 1955 – 1956 |
10 | திருமிகு த. மணிமாறன் | 1956 – 1986 |
11 | திருமிகு தெ. துரைசாமி | 1956 – 1991 |
12 | திருமிகு சிவராமகிருஷ்ணசாஸ்திரி | 1956 -1958 |
13 | முனைவர் கு. திருமேனி | 1957 – 1986 |
14 | திருமிகு ஆர். அரங்கராசன் | 1965 – 1966 |
15 | முனைவர் கே.ஏ. இராசாராமன் | 1966 - 1967 |
16 | திருமிகு ஆர். கிருஷ்ணமூர்த்தி | 1967 -1968 |
17 | முனைவர் சோ. சத்தியசீலன் | 1968 – 1975 |
18 | முனைவர் நா. இராசகோபாலன் | 1968 -1985 |
19 | திருமிகு வி். சுப்பிரமணியன் | 1968 -1972 |
20 | திருமிகு பிலோமினாமேரி | 1968 – 1970 |
21 | திருமிகு ச. ஆறுமுக முதலியார் | 1968 – 1970 |
22 | முனைவர் மகா. வேங்கடராமன் | 1969 – 1990 |
23 | திருமிகு கு. மாதவன் | 1964 – 1996 |
24 | முனைவர் வி. நாகராசன் | 1965 – 2000 |
25 | முனைவர் ந. சேஷாத்திரி | 1966 – 2003 |
26 | முனைவர் ம. இலக்குமிநாராயணன் | 1969 – 2002 |
27 | திருமிகு சுப. வேங்கடராமன் | 1970 – 2002 |
28 | முனைவர் வே. இராமசுப்பிரமணியன் | 1975 – 2004 |
29 | முனைவர் இரா. இரகோத்தமன் | 1975 – 2007 |
30 | முனைவர் ச. கணேசன் | 1976 – 2004 |
31 | முனைவர் சொ. சற்குணம் | 1985 – 2006 |
32 | முனைவர் அ.வ. இராசகோபாலன் | 1986 – 1992 |
33 | முனைவர் ஆ. செகந்நாதன் | 1985 – 2004 |
34 | முனைவர் சி. சித்ரா | 1998 – 2007 |
35 | முனைவர் கு. இராசரத்தினம் | 1985 – 2015 |
36 | முனைவர் இரா. சபாபதி | 1997 – 2016 |
37 | முனைவர் சாமி. திருமாவளவன் | 1992 -2017 |
துறைத்தலைவர்களாகப் பணிபுரிந்தோர் | ||
---|---|---|
1 | திருமிகு ச. ஆறுமுக முதலியார் | 1968 -1970 |
2 | திருமிகு தி. சே. பாலசுப்பிரமணியன் | 1970 – 1974 |
3 | முனைவர் கு. திருமேனி | 1974 – 1986 |
4 | திருமிகு தெ. துரைசாமி | 1986 – 1991 |
5 | திருமிகு கு. மாதவன் | 1991 – 1996 |
6 | முனைவர் வி. நாகராசன் | 1996 – 2000 |
7 | திருமிகு சுப. வேங்கடராமன் | 2000 – 2002 |
8 | முனைவர் ந. சேஷாத்திரி | 2002 – 2003 |
9 | முனைவர் வே. இராமசுப்பிரமணியன் | 2003 – 2004 |
10 | முனைவர் இரா. இரகோத்தமன் | 2004 – 2007 |
11 | முனைவர் கு. இராசரத்தினம் | 2007 – 2015 |
12 | முனைவர் ச. ஈஸ்வரன் | 2015 முதல் |
பாடப்பிரிவுகள் |
---|
பி.ஏ. – இளங்கலைத்தமிழ் |
எம்.ஏ. – முதுகலைத்தமிழ் |
எம்.பில். – ஆய்வியல் நிறைஞர் (பகுதிநேரம் மற்றும் முழுநேரம்) |
பிஎச்.டி. – முனைவர் பட்டம் (பகுதிநேரம் மற்றும் முழுநேரம்) |
பி.லிட். – இளங்கலைத்தமிழ் (சுயநிதிப் பிரிவு) |
வ.எண் | படிப்பு | இருக்கைகள் | எதிர்காலப் பயன்கள் |
---|---|---|---|
1 | பி.ஏ. (தமிழ்) | 30 | இளநிலைப்பள்ளி ஆசிரியர், இதழியலாளர், அரசு குடிமைப்பணியாளர் போன்றன. |
2 | எம்.ஏ. (தமிழ்) | 25 | முதுநிலைப்பள்ளி ஆசிரியர், ஊடகவியலாளர், கவிஞர், குடிமைப்பணிகள். |
3 | எம்ஃபில் (தமிழ்) | 18 | ஆய்வாளர், ஆய்வு உதவியாளர், படைப்பாளர் போன்றன. |
4 | பிஎச்.டி. (தமிழ்) | - | கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முதுமுனைவர் ஆய்வு போன்றன. |
5 | பி.லிட். (தமிழ்) | 30 | இளநிலைப்பள்ளி ஆசிரியர், அரசு குடிமைப்பணியாளர், இதழாசிரியர், மெய்ப்புத் திருத்துநர் போன்றன. |
வ.எண் | படிப்பு | சேர்க்கைத் தகுதி |
---|---|---|
1 | பி.ஏ. (தமிழ்) | பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி (தமிழ் மொழிப்பாடத்துடன்) பெற்றிருத்தல் வேண்டும். |
2 | எம்.ஏ. (தமிழ்) | இளங்கலை அல்லது இளம் அறிவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி (தமிழ் மொழிப்பாடத்துடன்) பெற்றிருத்தல் வேண்டும். |
3 | எம்ஃபில் (தமிழ்) | முதுகலைத்தமிழ்ப் பட்டமேற்படிப்பில் 55 விழுக்காட்டிற்குமேல் பெற்றிருத்தல் வேண்டும் |
4 | பிஎச்.டி. (தமிழ்) | முதுநிலைப் பட்டமேற்படிப்பு அல்லது எம்ஃபில் ஆய்வுப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். |
5 | பி.லிட். (தமிழ்) | பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி (தமிழ் மொழிப்பாடத்துடன்) பெற்றிருத்தல் வேண்டும். |
நிகழ்த்தப்பட்டவை (குறுந்திட்டம்)
வ.எண் | தலைப்பு | ஆய்வாளர் | நிறுவனம் | தொகை | நிறைவு தேதி |
---|---|---|---|---|---|
1 | தேசிய ஒருமைப்பாட்டிற்கு விளம்பரத் தமிழின் பங்களிப்பு | முனைவர் இரா. சபாபதி | பல்கலைக் கழக மானியக்குழு | ரூபாய் 70,000 | ஜனவரி, 2012 |
2 | நீலகிரி தோடர்களின் சடங்குகளும் நம்பிக்கைகளும் | முனைவர் இரா. இரவிச்சந்திரன் | பல்கலைக் கழக மானியக்குழு | ரூபாய் 1,00,000 | பிப்ரவரி, 2014 |
3 | தமிழ்க் கவிதைகளில் மனிதவளமேம்பாடு | முனைவர் சி. சித்ரா | பல்கலைக் கழக மானியக்குழு | ரூபாய் 1,50,000 | டிசம்பர், 2007 |
2016, பிப்ரவரித் திங்கள் 12 ஆம் நாள் ‘தமிழிலக்கியங்களில் மேலாண்மைச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நிகழ்த்தப்பெற்றது. இதில் 145 ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தளிக்கப்பெற்றன. இவை அடங்கிய ஆய்வுக்கோவையைத் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் முனைவர் ம. திருமலை வெளியிட, கல்லூரிச் செயலர் திருமிகு கா. ரகுநாதன் பெற்றுக்கொண்டார். இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து ஆய்வுக்கோவையைப் பதிப்பித்தவர் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன்.
2017, டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் ‘தமிழ் இலக்கியங்களில் பல்துறைச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நிகழ்த்தப்பெற்றது. இதில் 74 ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தளிக்கப்பெற்றன. இவை அடங்கிய ஆய்வுக்கோவையைத் திருச்சிராப்பள்ளி தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் துரை. தம்புசாமி வெளியிட, கல்லூரிச் செயலர் திருமிகு கா. ரகுநாதன் பெற்றுக்கொண்டார். இக்கருத்தரங்கினைத் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன் ஒருங்கிணைத்து, ஆய்வுக்கோவையைப் பதிப்பித்தார்.
தமிழ் வரலாற்று நாவல்களின் தந்தை எனப்படும் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பெயரில் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் தொடக்க விழாவும் முதல்பொழிவும் 15 – 02 – 2018 அன்று தேசியக்கல்லூரி அரங்கில் கல்லூரிச் செயலர் திருமிகு கா. ரகுநாதன் முன்னிலையில் முதல்வர் முனைவர் இரா. சுந்தரராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் முனைவர் ம. திருமலை கலந்துகொண்டு ‘கல்கி – ஓர் அற்புதச்சுடர்’ என்னும் தலைப்பில் பொழிவு நிகழ்த்தினார்.
தேசியக்கல்லூரித் தமிழாய்வுத்துறை, திருமந்திரம் அருட்சபை அறக்கட்டளையுடன் இணைந்து 2018, செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள் ‘பன்னோக்குப் பார்வையில் திருமந்திரம்’ என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நிகழ்த்தப்பெற்றது. இதில் 102 ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தளிக்கப்பெற்றன. இவை அடங்கிய ஆய்வுக்கோவையைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் மேஜர் ச. சோமசுந்தரம் வெளியிட, கல்லூரிச் செயலர் திருமிகு கா. ரகுநாதன் பெற்றுக்கொண்டார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன், இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து ஆய்வுக்கோவையைப் பதிப்பித்தார்.
திருமதி கு. சிந்து, எம். ஏ. தமிழ்ப் பட்ட மேற்படிப்பில் (2016 – 2018) பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் ஏழாம் (7) இடம் பெற்றுள்ளார்.
செல்வி ச. கௌசல்யா, பி. ஏ. தமிழ்ப் பட்டப் படிப்பில் (2015 – 2018) பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் 21 இடம் பெற்றுள்ளார்.
வ.எண் | மாணவர் நல ஆலோசகர் | வகுப்பு |
---|---|---|
1 | முனைவர் க. புவனேஸ்வரி | இளங்கலை முதலாம் ஆண்டு |
2 | முனைவர் இரா. சுந்தரவேல் | இளங்கலை இரண்டாம் ஆண்டு |
3 | முனைவர் சா. நீலகண்டன் | இளங்கலை மூன்றாம் ஆண்டு |
4 | முனைவர் இரா. பத்மா | முதுகலை முதலாம் ஆண்டு |
5 | முனைவர் அ. கிருஷ்ணன் | முதுகலை இரண்டாம் ஆண்டு |
6 | முனைவர் வெ. குப்புசாமி | பி.லிட். முதலாம் ஆண்டு |
தமிழாய்வுத்துறையில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குக் கீழ்க்காணும் அறக்கட்டளைகள் மூலம் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.
Programmes Offered |
---|
B.A., Tamil |
B.Litt. Tamil |
M.A., Tamil |
M.Phil. Tamil |
Ph.D. Tamil |
Number of Research publications : National: 60 Books International: -
Area of Specialization : Criticism
Contact : 9486066384
E-Mail : eswar_shanti@yahoo.co.in
Number of Research publications : National: 10 Books International: -
Area of Specialization : Modern Literature
Contact : 9443531163
E-Mail : nmanikkam64@gmail.com
Number of Research publications : National: 10 Books International: -
Area of Specialization : Modern Literature
Contact : 9789569380
E-Mail : gandhiksg@gmail.com
Contact : 9442914570
E-Mail : kalairavi1974@gmail.com
Number of Research publications : National: 10 Books International: -
Area of Specialization : Modern Literature
Contact : 9443996641
E-Mail : dr.neelakabi@gmail.com
Number of Research publications : National: 15 Books International: 3
Area of Specialization : Epic [Kambaramayanam]
Contact : 9751222281
E-Mail : arumugesh@gmail.com
Number of Research publications : National: 5 Books International: -
Area of Specialization : Folklore
Contact : 9944925379
E-Mail : rsundaravel74@gmail.com
Number of Research publications : National: 4 Books International: -
Area of Specialization : Folklore
Contact : 9787550679
E-Mail : akajaynct@gmail.com
Area of Specialization : Modern Literature
Contact : 9894756895
E-Mail : ramadossthiyagu@gmail.com
Contact : 9787068154
E-Mail : padma.sampath42@gmail.com
Contact : 7402014440
E-Mail : muthu.rcfs@gmail.com
Contact : 8220600783
E-Mail : buvi1727@gmail.com
Contact : 9865767721
E-Mail : sengolan84@gmail.com
Contact : 9443533007
E-Mail : anand.n.phd@gmail.com
Area of Specialization : Modern literature, ikkala illakiyam
Contact : 9843800754
E-Mail : rajalakshmiarumugam1981@gmail.com
Contact : 9942697610
E-Mail : thangaselvik@net.ac.in
Contact : 8220105995
E-Mail : magiumatha@gmail.com
Contact : 7708890004
E-Mail : -
Contact : 9500703951
E-Mail : sheelaJai3@gmail.com
Number of Research publications : National: 2 Books International: -
Area of Specialization : Grammer in Tamil
Contact : 7373903835
E-Mail : ramnct24@gmail.com
Number of Research publications : National: 2 Books International: -
Contact : 9865469664
E-Mail : Ramnct27@gmail.com
Number of Research publications : National: 10 Books International: 2 Books
Area of Specialization : Modern Literature
Contact : 9578144164
E-Mail : Kmuthaiyan2011@gmail.com
Number of Research publications : National: 4 Books International: 2 Books
Area of Specialization : EPIC
Contact : 9751256661
E-Mail : tamil.karu@yahoo.in
Number of Research publications : National: 1 Book International: 7 Books
Contact : 9976225551
E-Mail : Murugu.kanakasabai@gmail.com
Contact : 9976328622
E-Mail : Sumathikumartamil@gmail.com
Contact : 9952895544
E-Mail : Chellabhuvana@yahoo.com
S.No | Name | Designation | No. of M.Phil Guided | No. of Ph.D Guided |
---|---|---|---|---|
1 | Dr. K. Rajarathinam | Associate Professor.,(Retired) | 10 | 06 |
2 | Dr. R. Sabapathy | Associate Professor.,(Retired) | 10 | 02 |
3 | Dr.S.Eswaran | Associate Professor & Head | 11 | 09 |
4 | Dr.S.Thirumavalavan | Associate Professor | 10 | 17 |
5 | Dr. N. Manickam | Associate Professor | 11 | 02 |
6 | Dr. S. Chitra | Associate Professor | -- | 04 |
7 | Dr.S.Gandhi | Assistant Professor | 10 | -- |
8 | Dr. R. Ravichandran | Assistant Professor | 03 | -- |
The teachers of the Department have published the following book in the last few years.
Dr.K.Rajarathinam (2006) Tamil | சங்க இலக்கியத்தில் பொது மக்கள் |
இரா.சபாபதி, Tamil (2008) | பொது மொழியியல் எம்.ஏ அஞ்சல்வழிக் கல்வித்துறை |
இரா.சபாபதி, Tamil (2008) | பக்தி இலக்கியம் தமிழ் பல்கலைக்கழகம் |
இரா.சபாபதி, Tamil (2008) | ஊடகத் தொடர்பியல் பெரியார் பல்கலைக்கழகம் |
இரா.சபாபதி, Tamil (2008) | விளம்பரங்கள் அன்றும் இன்றும் |
இரா.சபாபதி, Tamil | இதழியல் இணை ஆசிரியர் மாநில அரசின் சிறந்த நூலுக்கான விருது 241. பக் பாவை பதிப்பகம், இராயப் பேட்டை, சென்னை – 14. |
இரா.சபாபதி, Tamil | தமிழ் இதழ்களின் விளம்பர உத்திகள், குகன் பதிப்பகம் |
ச.ஈஸ்வரன், Tamil | இலக்கியத்திலிருந்து தமிழ் இன்பத் தேன், மணிமேகலைப் பிரசுரம், தி.நகர், சென்னை |
ச.ஈஸ்வரன், Tamil | இலக்கிய சிந்தனைகள், காவ்யா டிரஸ்ட்புரம், சென்னை |
ச.ஈஸ்வரன், Tamil | இதழியல் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை சென்னை-14. |
ச.ஈஸ்வரன், Tamil | மொழிபெயர்ப்பியல் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை சென்னை-14. |
ச.ஈஸ்வரன், Tamil | செய்தி சேகரிப்பும் ஊடகச்சடங்குகளும் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை, சென்னை-14. |
ச.ஈஸ்வரன் , Tamil | சுற்றுலாவியல் பாவைப் பதிப்பகம் ஜானிதாள் சாலை இராயப்பேட்டை, சென்னை-14. |
ச.ஈஸ்வரன்(2009), Tamil | அறிவியல் தமிழ் சாரதா பதிப்பகம், சென்னை. |
ச.ஈஸ்வரன் (2009), Tamil | இதழியல் - ஒர் அறிமுகம் சாரதா பதிப்பகம், சென்னை. |
முனைவர்.இரா.இரவிசந்திரன் Tamil | நாட்டுப்புறப்பாடல்கள், நல்நிலம் பதிப்பகம், ஸ்கைடெக் பப்ளிகேஷன்ஸ்ன் தமிழ் அங்கம் |
முனைவர்.ச.நீலகண்டன் , Tamil | உளிகள் (கவிதைத் தொகுதி) கபிலன் பதிப்பகம், இராமநாதபுரம் புதூர் நாமக்கல் மாவட்டம் |
முனைவர்.ச.நீலகண்டன் , Tamil | கருவறை (கட்டுரை தொகுதி) கபிலன் பதிப்பகம், இராமநாதபுரம் புதூர் நாமக்கல் மாவட்டம். |
முனைவர்.ச.நீலகண்டன் , Tamil | மனவளக்கலையின் மாண்பு, கபிலன் பதிப்பகம், இராமநாதபுரம் புதூர் நாமக்கல் மாவட்டம். |
UGC sponsored National Seminar on “தமிழ் இலக்கியகளில் காணலாகும் மனித நெயமும் மத நல்லிணக்கமும” 05.10.2006 and 06.10.2006.
A Three-day Workshop on Testing and Evaluation sponsored by NTS was organized by the Regional Field Unit – 7th Zone located in the Department of Tamil of our College between 28.05.2009 and 30.05.2009.
A Three-Day Training cum Workshop on Item Writing sponsored by NTS was conducted by the Regional Field Unit 7 of the National Testing Service, Mysore functioning in our College from 30-09-2009 to 02.10.2009.
© 2020 Copyright National College, Trichy
Designed & Developed By : RM Soft System