Teachers Day Celebration
தேசியக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
14.9.2024 அன்று நண்பகல் 12 மணி அளவில் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்று தலைமையுரை நல்கினார்.
பணி நிறைவு பெற்ற வணிகவியல் துறைப் பேராசிரியர் முனைவர் ஸ்ரீனிவாசவல்லபன் மற்றும் பணி நிறைவு பெற்ற மண்ணியல் துறை தலைவர் குமார் ஆசிரியர் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரை வழங்கினர். அறியாமை என்ற இருளை அகற்றி அறிவு என்ற ஒளியை பரப்பி புவியில் சான்றோர் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதற்கு பெரிதும் துணை செய்பவர்கள் ஆசிரியர்களே என்றும் தேசியக் கல்லூரி தொழில்நுட்பம் வளராத கிராமப்புற மாணவர்களைக் கூட அறிவார்ந்த சமூகத்தில் தலை நிமிர வைத்து செயல்பட வைக்க கூடியது என்றும் சிறப்புரை வழங்கினர்.
எதிர்கால சமூகம் சமூக சீர்கேடுகள் களைந்த வளர்ச்சி அடைந்த சமுதாயமாக உருவாவதற்கு இளம் தலைமுறையினர் மட்டுமே காரணமாக இருப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஆசிரியர் பெருந்தகைகள் வழிகாட்டுதல் செய்ய வேண்டும் என்றும் தம் சிறப்புரையில் பதிவு செய்தனர். நிறைவாக துணை முதல்வர் முனைவர் நந்தகோபால் நன்றியுரை வழங்கினார். விழாவில் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்





